இந்தியா கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகக் கடற்பகுதியிலிருந்து கர்நாடகா கடற்பகுதி வரை, மத்திய கிழக்கு அரபிக் கடலில் சூறாவளி நிலைகொண்டுள்ளது.
இதனையடுத்து வரும் 26ஆம் திகதி வரை அங்கு கனமழை பெய்யும் என, வானிலை முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுமாறும் அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாளை மறுதினம் கேரளாவிலுள்ள பல பிரதேசங்களில் கடும் மழையுடனான வானிலை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
1ஆம் திகதி முதல் இம்மாம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அம்மாநிலத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அங்கு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#INDIA
Leave a comment