WhatsApp Image 2021 11 01 at 12.10.17 PM
செய்திகள்அரசியல்இலங்கை

அரசுக்கு பெரும் நெருக்கடி.! – எஸ்.பி. திஸாநாயக்க

Share

நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பூண்டுலோயா – கொத்மலை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.  இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஆடை ஏற்றுமதி ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதால் வருமான வழிகள் இழக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படக்கூடும். உலகளவில் இன்று பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இங்கும் அந்நிலைமை ஏற்படலாம். கப்பல் கட்டணம் நூற்றுக்கு 300 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

போர் காலத்தில் பொருளாதாரம் சரிந்தது. போர் முடிந்த பின்னர் 2015 ஆகும்வரை சிறந்த வளர்ச்சி மட்டத்தில் நாம் இருந்தோம். அடுத்த வருட இறுதியாகும்வரை முன்னேற்றம் ஏற்படலாம்.

யுகதனவி விவகாரத்தில் அரசியல், பொருளாதாரம் என இரு பக்கங்கள் உள்ளன. அவை தொடர்பில் புரிந்துணர்வு இல்லாமல் சிலர் கதைக்கின்றனர். யுகதனவி தொடர்பில் அரசு எடுத்துள்ள முடிவு சரியானது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...