Anura Dissanayake in Parliament.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ஐ.நா.வில் அனுதாப அலையை திரட்டுதற்கு அரசு நாடகம்! – நம்பாதீர்கள் என்கிறார் அநுரகுமார

Share

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேறுவதற்கான வாய்ப்பை வழங்கிவிட்டு, அதனை வைத்து உள்நாட்டு அரசியல் நடத்துவதற்கும், அனுதாப அலையை திரட்டுதற்கும் அரசு அரங்கேற்றும் நாடகத்தை நாட்டு மக்கள் நம்பக்கூடாது.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அரநு மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு ஆரம்பத்தில் கொரோனாவைக் காரணம் காட்டினர். தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ரஷ்யா, உக்ரைன் மோதலைக்காரணம்காட்ட முற்படுகின்றனர். அடுத்ததாக ஜெனிவா விவகாரத்தையும் பயன்படுத்துவார்கள்.
அதாவது தேசப்பற்றுள்ள அரசே நாட்டை ஆள்கின்றது, இது மேற்குலகத்துக்கு சகித்துக்கொள்ள முடியவில்லை, அதனால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்யப்படுகின்றது எனவும் பரப்புரை முன்னெடுப்பார்கள்.

இந்த சூழ்ச்சிக்காரர்களின் பிடிக்குள் பேராயர் சிக்கிவிட்டார் எனவும் முழக்கம் எழுப்புவார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை. தகவல்கள் கிடைத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியோர் மற்றும் தாக்குதலை திட்டமிட்ட சூத்திரதாரிகளுக்கு எதிராக நடவடிக்கையும் இல்லை.

எனவே, நீதிக்காக போராடுவதற்கான உரிமை பேராயருக்கு இருக்கின்றது. உள்நாட்டில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்தான் அவருக்கு சர்வதேசத்தை நாட வேண்டி வந்தது. இதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்ததற்கான பொறுப்பை அரசுதான் ஏற்கவேண்டும்.

ஜெனிவாவில் அழுத்தங்கள் வந்தால் அதற்கான பொறுப்பையும் அரசு ஏற்கவேண்டும். ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற இடமளித்துவிட்டு, அதனை வைத்து உள்நாட்டில் அரசியல் நடத்தும் நாடகம் 10 ஆண்டுகளாக தொடர்கின்றது. இனியும் மக்கள் ஏமாறக்கூடாது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...