ranchqan
செய்திகள்அரசியல்இலங்கை

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு – எதிர்க்கட்சி கோரிக்கை

Share

” சிறைதண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கட்சியின் சார்பில் இந்த கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க விடுத்தார்.

” ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. சிறைக்குள் என்ன நடக்கும் என்பது தெரியாது. எனவேதான் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோருகின்றோம்.

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் அதனை எவரும் எதிர்க்கமாட்டார்கள். போராட்டங்களை முன்னெடுக்கமாட்டார்கள்.” – என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...