velukumar
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரியில் இலங்கையில் உணவுப் பஞ்சம்! –

Share

2022 ஜனவரியில் இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் ஊழல், மோசடிகளும், தவறான முடிவுகளும், தெளிவற்ற கொள்கைகளுமே பிரதான காரணங்களாகும். அடுத்த மாதமளவில் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும்.

நாட்டு நிலைமை இவ்வாறிருக்க, அமைச்சர்கள் ‘அறிக்கைகளை’ வெளியிட்டு அரசியல் நடத்திவருவதுடன், உறுதியான அறிவிப்புகள் இன்றி ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர். சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றனர்.

இந்த நாட்டை பட்டினியை நோக்கி கொண்டு செல்லாதீர்கள் என அரசிடம் வலியுறுத்திக்கூறிக்கொள்கின்றோம். முடியாவிட்டால் வீட்டுக்கு செல்லுங்கள். நாட்டை பொறுப்பேற்று நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது. அதற்கான கொள்கைத் திட்டங்கள் எம் வசம் உள்ளன.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...