இந்தியாவின் பெங்களூரில் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் தொடர்ந்து குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த தமிழகத்தைச் சேர்ந்த நபர் உட்பட ஐவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 18 குழந்தைகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக் குழந்தை கடத்தலில் பாரிய கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது எனவும், அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment