ரஸ்யாவிற்கு அடிக்கு மேல் அடி!!

000 9Y62D6

உக்ரைன் லுஹான்ஸ்க் மாகாணத்தின் ரஷ்ய பிரிவிணைவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது தயாராக இருந்த உக்ரைன் ராணுவம் ஷ்சாஸ்டியா நகரத்தின் மீதான தாக்குதலை முறியடித்துள்ளது.

உக்ரைனில் இன்று அதிகாலை 5 மணியளவில் உக்ரைனின் மாநில எல்லையான ரஷிய கூட்டமைப்பு மற்றும் பெலாரஸ் குடியரசு அருகிலுள்ள பிரிவுகளில் பெலாரஸின் ஆதரவுடன் ரஷ்ய படைகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் சைட்டோமிர் ஆகிய பகுதிகளில் பீரங்கி,சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி எல்லைப் பிரிவுகள், எல்லைக் கண்காணிப்பு மற்றும் சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், ரஷ்ய பிரிவினைவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட இருந்த ஷ்சாஸ்டியா நகரம் மீட்கப்பட்டது. தாக்குதல் நடத்த முயற்சித்தபோது ஆயுதங்கள், உபகரணங்கள் அழிக்கப்பட்டன.

இதில் சுமார் 50 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டதாக போர் திறம் வாய்ந்த தகவல் தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

#worldnews

Exit mobile version