அவசர கால சட்டம் மக்களை அடக்க அல்ல!! – டிலான் பெரேரா
நாட்டில் அவரசர கால சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டதன் விளைவாகவே பல பதுக்கல் குடோன்களை கைப்பற்ற முடிந்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இது தொடர்பில் மேலும் தெரிக்கையில்,
மக்களை அடக்குமுறை செய்வதற்காக இந்த சட்டம் அல்ல. எதிர்க்கட்சியினர் கறுப்புச் சந்தையிலுள்ள முதலாளிகளுக்கு விசுவாசமாகவே நடக்கின்றனர். ஆனால் மக்கள் பக்கமாக அரசாங்கம் உள்ளது.
அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டால் நிச்சயமாக சீனி விலை இன்று 270 ரூபாவாக விற்கப்படும் அபாயம் ஏற்படும்.
ஆசிரியர்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி போராட்டம் செய்தபோதும் பொலிஸாரை ஈடுபடுத்தி அதனை கட்டுப்படுத்தவில்லை.
ஆனால் ஆஸ்திரேலியாவில் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டபோது அந் நாட்டுப் பொலிஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜனநாயகம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மறந்துவிட்டார். ஜனநாயகம் அழிக்கப்பட்டதை அவர் தனது வீட்டிலிருந்தே கற்றுக்கொண்டார் – என்றார்.
Leave a comment