Digital
செய்திகள்உலகம்

உலகின் முதல் டிஜிட்டல் அரசாங்கமாக துபாய்!!

Share

உலகின் முதல் டிஜிட்டல் அரசாங்கமாக துபாய் மாறியுள்ளது.

அதாவது உலகிலேயே 100 சதவீதம் காகிதம் இல்லாத அரசாங்கமாக துபாய் மாறியுள்ளதாக அந்நாட்டு பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் துபாயில் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது.

அத்துடன் இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் 5-வது கட்டத்தின் முடிவில், துபாயில் 45 அரசு துறைகளும் காகிதமற்ற டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டன.

இதனால் உலகின் முதல் டிஜிட்டல் அரசு என்ற பெருமையை துபாய் தன் வசமாக்கியுள்ளது.

இந்த துறைகள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் தெரிவிக்கையில்,

இந்த சாதனை புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் தமது வெற்றி பயணம் எனவும் ,

இது துபாயின் உலக முன்னணி டிஜிட்டல் மூலதனம் மற்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கவும்,அரசாங்க செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் இது ஒரு முன்மாதிரியாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்,

இத்திட்டத்தின் மூலம், 2650 கோடி இந்திய ரூபாய்கள் அதாவது 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தமது அரசாங்கத்திற்கு சேமிக்க படுகின்றதெனவும், 14 மில்லியனுக்கும் அதிகமான மனித வேலை நேரமும் குறைந்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...