748760
செய்திகள்உலகம்

வரட்சியில் கென்யா: மனதை கலங்க வைக்கும் புகைப்படம்!!

Share

சமூக வலைதளங்களில் 6 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்துகிடக்கும்  புகைப்படமொன்று மனதை பதைக்க வைக்கும் வகையில் பரவலாக பகிரப்படுகின்றது.

குறித்த புகைப்படம் கென்யாவில் நிலவும் வறட்சியால் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள துயரை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

உணவு, தண்ணீரின்றி தவித்த ஒட்டகச்சிவிங்கிகள், அருகிலுள்ள ஏறக்குறைய வறண்ட நிலையில் இருந்த ஒரு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குடிக்க முயன்றபோது சேற்றில் சிக்கி இறந்த பிறகு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நீர்த்தேக்க தண்ணீர் மாசுபடுவதை தடுக்க இவற்றின் உடல்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கென்யாவின் பெரும்பாலான இடங்களில் கடந்த செப்டம்பரில் இருந்து வழக்கமான மழைப்பொழிவில் 30 சதவீதத்துக்கு குறைவாகவே பெய்துள்ளது.

இதனால் இப்பிராந்தியத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. கால்நடை மேய்ப்பவர்களும் தங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமின்றி தவிக்கும் நிலை உள்ளது.

#WorldNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...