1626854550393
செய்திகள்விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் 

Share

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளராகவுள்ள, ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளுடன்
நிறைவுக்கு வருகின்றது.

இந்நிலையில் புதிய பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கையில் அண்மைய நாட்களாக இந்திய கிரிக்கெட் சபை ஈடுபட்டு வந்தது.

இந்திய அணிக்குள் புதிய இளம் வீரர்களை உருவாக்கி வரும் டிராவிட், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்குப்
பொருத்தமானவர் என கணித்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி, செயலாளர் ஜெய்ஸா ஆகியோர் நேற்றமுன்தினம் அவரிடம் பேச்சு
வார்த்தை நடாத்தினர்.

ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய டிராவிட், பின்னர் 2023ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக செயற்பட சம்மதம் வெளியிட்டார்.

ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நிறைவடைந்த பின்னர், டிராவிட் இந்திய அணியைப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...