china sl
செய்திகள்அரசியல்இலங்கை

நன்கொடையாக அரிசியா?? – இல்லவே இல்லை என்கிறது சீனா – ஆம் என்கிறது இலங்கை

Share

இலங்கைக்கு நன்கொடையாக ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசி சீனாவால் வழங்கப்படவுள்ளது எனும் தகவலை சீனா மறுத்துள்ளது.

ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு சீன இராஜதந்திரி ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில், அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரிசியை நன்கொடையாக வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டது உண்மையே. இருப்பினும் அந்த கோரிக்கையை சீனா மறுத்துள்ளது – என்றார்.

இதேவேளை, இது தொடர்பில்அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவிக்கையில்,

இலங்கை – சீனா இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அரிசி நன்கொடையாக பெறப்படவுள்ளது – என்றார்.

இந்த நிலையில், குறித்த ஆங்கில பத்திரிக்கைக்கு, வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், இந்த வேண்டுகோளை ஏற்றுள்ள சீன அரசு இதற்கு இணங்கியுள்ளது. இந்த விடயத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்றுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...