Pointpedro
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

Share

அண்மையில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் 23 பேர் சார்பிலும், இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி லோ.குகதாஸ் ஆஜராகியிருந்தார்.

கைது செய்யப்பட்ட 23 மீனவர்களுக்கெதிராகவும் எல்லை தாண்டிய மீன் பிடியில் ஈடுபட்டமை, தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தக்கூடிய நிலையில் வைத்திருந்தமை, அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

மீனவர்கள் வழக்கு விசாரணைகளுக்கு யாழ் இந்திய துணை தூதாக அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.

இந்திய மீனவர்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டத்தரணி ஜோய் மகாதேவாவும் ஆஜராகியிருந்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...