பின்லாந்து அரசு மிங்க் வகையைச் சேர்ந்த கீரிகளுக்கும் கொரோனாத் தடுப்பூசியை செலுத்த முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிங்க் வகைகயைச் சேர்ந்த கீரிகள் அதிகம் காணப்படுகின்றன.
அவற்றின் அடர்த்தியான ரோமத்தில் குளிருக்கு இதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
இதனால் அவைகளிடமிருந்து புதுவகை கொவிட் வைரஸ் உருவாக வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் இந்த வகை கீரிகள் அழிக்கப்பட்டன.
இந்த நிலையில் பின்லாந்து அரசு மிங்குகளுக்கு கொரோனாத் தடுப்பூசி ஏற்ற முடிவு செய்துள்ளது. சோதனையின் முயற்சியான நேற்று மிங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கென 50 லட்சம் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன எனவும் அனைத்து மிங்குகளுக்கும் இரண்டு தடுப்பூசி டோஸ்களும் செலுத்த இவை போதுமானவை எனவும் பின்லாந்து சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment