basil rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

சிகரெட் விலை அதிகரிப்பு!

Share

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஏனைய விடயங்கள்

  • பெருந்தோட்ட மக்களுக்கு புதிய குடியிருப்புகளை நிர்மாணிக்க 511 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • பொருட்களின் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு 31 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • வனஜீவரசிகள் பாதுகாப்புக்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • சிறைக்கு கைதிகளின் உடல் நலனைப் பேணுவதற்கு 200 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு.
  • பொதுமக்கள் பாதுகாப்புக்காக பொலிஸ் திணைக்களத்துக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • அனைத்து வாக்காளர் தொகுதிக்கும் 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • நீர்ப்பாசன மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கு மேலும் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • தொழில் பயிற்சிக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • ரயில்வே பயணிகள் போக்குவரத்துக்கு மேலும் 2000 ரூபா மில்லியன் ஒதுக்கீடு.
  • விளையாட்டு மேம்பாட்டுக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • நீதித்துறை செயன்முறையை டிஜிட்டல் மயமாக்க மேலும் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • அரச நிறுவனங்களில் 2015 முதல் அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டோருக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • கிராமப்புறங்களில் மதத்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • கர்ப்பிணிப்பெண்களுக்கான போஷாக்கு பொதியை 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு 300 ரூபா மில்லியன் ஒதுக்கீடு.
  • ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு 14,000க்கும் மேற்பட்ட வீட்டுக்கடைகளுக்கு 15,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • வீட்டு அடிப்படையிலான பொருளாதாரம் மற்றும் நலனுக்கு 31,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • அரச துறையில் பட்டதாரி அடிசேர்ப்பு – ஏற்கனவே பணியமர்த்தப்பட்டோருக்கு 2022 இல் நிரந்தர வேலைவாய்ப்பு – 7,600 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு.
  • வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு நிவாரணப்பொதி வழங்க 15,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • மது வரி அதிகரிப்பதால் 25 வீத வருமானம் பெற தீர்மானம்.
  • தொழில்முறை சங்கங்களுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க முதல் கட்டமாக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க யோசனை.
  • மோட்டார் வாகன விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் விபத்தை ஏற்படுத்திய நபரிடமிருந்து கட்டணம் வசூலிப்பதற்கும், அதனை காப்பீடு மூலம் திரும்பிச் செலுத்துவதற்கும் வாய்ப்பு.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ordinary
இலங்கை

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்!

  கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை...

veppam 1
இலங்கை

வடக்கு கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பக் குறியீடு’, இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட சில...

sri lankas president
இலங்கை

மீண்டும் சந்தித்த கோட்டா மற்றும் ரணில்!

முன்னாள் ஜனாதிபதிகளாக கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கொழும்பில்...

arested
இலங்கை

நகரசபை உறுப்பினர் கைது – காத்தான் குடியில் சம்பவம்.

  பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய...