Jaffna 01 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொரோனாவைக் கட்டுப்படுத்தப் பணியாற்றியோரின் சேவையைப் பாராட்டி சான்றிதழ்!

Share

கொரோனா வைரஸ் தொற்று நோயை யாழ்ப்பாண குடாநாட்டில் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பணியாற்றிய 29 வைத்திய அதிகாரிகள், 86 சுகாதார பரிசோதகர்கள், 210 குடும்பநல உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் சேவையினைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு தலைமையில் இன்று இடம் பெற்றது.

Jaffna 02 1

இன்று மதியம் ஒரு மணியளவில் தல்செவன இராணுவ விடுதியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா, ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், யாழ். மாவட்ட தொற்று நோய் தொடர்பான வைத்திய நிபுணர் பரணிதரன்,சுகாதார பிரிவின் வைத்திய அதிகாரிகள்,

பொது சுகாதார பரிசோதகர்கள், படைப் பிரிவுகளின் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...