நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் (2007 எண்.7) தேசிய பெற்றோலிய மற்றும் எரிவாயு நிறுவனத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
புதைபடிவ எரிபொருள், பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்நாட்டில் கிடைக்கின்றன என்பது ஆராய்ச்சியின் படி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாக இந்த நிறுவனம் நிறுவப்படவுள்ளது.
இதனூடாக, புதைபடிவ எரிபொருள், பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை உற்பத்தி செய்வது மற்றும் உள்ளூர் நுகர்வுக்கான வாய்ப்பை உருவாக்குதல். அத்துடன் எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராக மாறுவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயு மீதான தேசிய கொள்கை என்பதற்கு அமைய சேமிப்பு, குழாய்கள் அமைத்தல், போக்குவரத்து மற்றும் விநியோக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, உரிமை மற்றும் கண்காணிப்பு உள்ளிட்டவற்றுக்கு பொருந்தக்கூடிய பொது-தனியார் கூட்டுறவின் கீழ் தேசிய இயற்கை எரிவாயு நிறுவனத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment