கினிகத்தேனை – கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகதொழுவ பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இ.போ.சவுக்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பஸ் ஒன்றும், கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.
நாவலப்பிட்டியவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கனரக வாகனமும், ஹட்டனிலிருந்து இருந்து நாவலப்பிட்டி கு சென்ற இ.போ.ச க்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் கனரக வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதோடு, பஸ்ஸின் சாரதியும், உதவியாளரும் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் கினிகத்தேனை – கண்டி வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறித்த கனரக வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
#SriLankaNews
Leave a comment