சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உட்பட அனைத்து விதமான வசதிகளையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.
மக்களை பாதுகாப்பதற்கான, அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்துக்கு எதிரணியின் ஒத்துழைப்பும் வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment