ec
செய்திகள்இலங்கை

அசாத் சாலி, ரங்காவின் கட்சிகளுக்கு ஆப்பு!!

Share

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவின் பிரஜைகள் முன்னணி மற்றும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட ஆறு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையின் படி தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்கவினால் இது தொடர்பிலான 2263/22 இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 21ஆம் திகதி வெளியிட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய – பிரஜைகள் முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய, எக்சத் லங்கா மகா சபா கட்சி, ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர் பதவி தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கைகளைச் சமர்ப்பிக்காமை போன்றன காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...