24 66c079340fa96 1
இந்தியாசெய்திகள்

குஷ்புவை முதலில் சமூக வலைதளத்தை பார்க்க சொல்லுங்கள்.., பதிலடி கொடுத்த கனிமொழி

Share

குஷ்புவை முதலில் சமூக வலைதளத்தை பார்க்க சொல்லுங்கள்.., பதிலடி கொடுத்த கனிமொழி

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை குறித்து கனிமொழி கருத்து தெரிவிக்கவில்லை என்று குஷ்பு பேசிய நிலையில் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கா் என்ற அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த வாரம் இரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அவர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை மீட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு, “கூட்டணி என்பதால் கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை குறித்து கனிமொழி, பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் வாய் திறக்காமல் இருக்கின்றனர்.

எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் பிரியங்கா, கனிமொழி எங்கே சென்றார்கள்?” என்று ஆவேசமாக பேசினார்.

இந்நிலையில் குஷ்புவின் கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி பதில் அளிக்கையில், “கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துவிட்டோம்.

இந்த விவகாரத்திற்கு நான் கருத்து கூறவில்லை என பாஜகவை சேர்ந்த குஷ்பு கூறியுள்ளார். அவரை முதலில் சமூக வலைதளத்தை பார்க்க சொல்லுங்கள், நான் கருத்து கூறி உள்ளேன்” என்றார்.

Share
தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....