corona 4
செய்திகள்இலங்கை

மேலும் 61 பேர் கொவிட் தொற்றினால் பலி !

Share

நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 941 பேர் நேற்று (29) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக கொவிட் தொற்றினால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 16 ஆயிரத்து 465 ஆக உயர்வடைந்துள்ளது

இவர்களில் 46 ஆயிரத்து 761 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளையில் மேலும் 61 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதில் 30 – 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 9 ஆண்களும் 5 பெண்களுமாக 14 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டோரில் 16 ஆண்களும் 31 பெண்களுமாக 47 பேரும் பலியாகியுள்ளனர் .

இதன்படி நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 847 ஆக அதிகரித்ததுள்ளது .

அத்தோடு நேற்று (29) கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 770 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 56 ஆயிரத்து 587 ஆக உயர்வடைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...