IMG 20211029 WA0010
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியத் தூதுவர் – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்திப்பு

Share

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் இருவரும் சந்தித்து உரையாடினர்.

இந்தச் சந்திப்பில் தூதரகத்தின் முதலாவது செயலாளர் திருமதி.பானு பிரகாஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சம்பந்தனுக்குத் தங்களுடைய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்தியத் தூதுவர், பல முக்கிய விடயங்கள் குறித்து சம்பந்தனுடன் உரையாடினார்.

இலங்கைக்கான புதிய அரசமைப்பு, இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை என்பவையும் இதில் அடங்கும்.

வடக்கு, கிழக்கில் இந்திய முதலீடுகள், உதவித் திட்டங்கள் பற்றியும் இதன்போது பேசப்பட்டன.

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவோடு இந்தியத் தூதுவர் சந்திப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 19
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அடுத்தடுத்த விபத்துக்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலங்கை நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும்,...

9 19
இலங்கைசெய்திகள்

கனடாவின் தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள நாமல்

கனடாவில்(Canada) தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம், உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க...

8 19
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்க அனைவரும் கைகோருங்கள்.. எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். இதில் அரசாங்கம், எதிர்த்தரப்பு மற்றும்...

7 19
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத மருந்து இறக்குமதி தொடர்பில் சிறப்பு விசாரணை

அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்திய மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய ஹியூமன் இம்யூனோகுளோபுலின்...