கொரோனாத் தொற்றுக்குள்ளான முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
கொரோனாத் தொற்றுக்குள்ளாகி, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அஜித் ரோஹண, பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார். அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதை உணர்ந்து முதல் சந்தர்ப்பத்திலேயே உடனடியாக சிகிச்சை பெறுவது மிக அவசியம் எனவும் அதனை தான் செய்ததன் காரணமாகவே இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் எனது போலி புகைப்படங்களைப் பயன்படுத்தி, தான் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறேன் என சமூகவலைதளங்களில் பிரசாரம் செய்தவர்கள் தொடர்பில் மிகவும் வருந்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தருணத்தில் விரைவாக குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஆகவே நோயை குறைத்து மதிப்பிடாமல் அறிகுறி தென்பட்ட உடனேயே சிகிச்சை பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a comment