இலங்கைக்கு ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படாது என்றே தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழுவொன்று இலங்கை வந்திருந்தது. என்னுடனும் பேச்சு நடத்தியிருந்தனர். இலங்கையால் நிறைவேற்றப்பட்டுள்ள நிபந்தனைகள், அவற்றின் சாதகத் தன்மை, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டது.
விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரையும் சந்திக்கவுள்ளேன். தலைமையகத்துக்கு முழு தகவல்களும் ஒப்படைக்கப்படும். எனவே, வரிச்சலுகையில் சிக்கல் வராது.” – என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.
#SrilankaNews