பொலன்னறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பொலன்னறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியை விளக்குகளால் அலங்கரிப்பதன் அவசியம் தொடர்பாக ஆராயப்பட்டது.
எதிர்வரும் ஆண்டு மே மாதம் முதல் புனித பூமியின் மின்விளக்கு கட்டணங்கள் மத்திய கலாசார நிதியத்தில் இருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு புனித தலத்தின் வீதிகளை கார்பட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்காக புனித பூமிகளின் அபிவிருத்திக்காக எதிர்வரும் 5 ஆண்டுக்காக இந்தியா வழங்க உள்ள 15 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
இதன்போது புனித பூமியின் கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுத் தர வேணடும் என பிக்குமார்களால் பிரதமருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
#SriLankaNews