Drugs arrest
செய்திகள்அரசியல்இலங்கை

முழு நாடுமே ஒன்றாக: ஒரே நாளில் 840 பேர் கைது – போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை தீவிரம்!

Share

நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்கும் ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனைகளில், கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 840 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சோதனைகளின் போது ஹெரோயின் 378 கிராம், ஐஸ் (ICE) 417 கிராம், ஹஷீஷ் உள்ளிட்ட ஏனைய பின்வரும் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன:

கைது செய்யப்பட்டவர்களில் 11 பேரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்ட 6 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ் நேற்று சுமார் 28,879 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் முடிவுகள் வருமாறு:

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 22 பேர் கைது. திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 126 பேர் கைது. மதுபோதையில் மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் செலுத்திய 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்களின்படி, நாட்டைப் போதைப்பொருள் அற்ற வலயமாக மாற்றும் இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

Share
தொடர்புடையது
சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்
இலங்கை

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்.

  இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள்...

இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...

anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...