covid cells
செய்திகள்இலங்கை

வடக்கில் 15 நாள்களில் 6,667 தொற்றாளர்கள்!

Share

வடக்கில்  செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான நிலையில் செப்டெம்பர் மாத முதல் 15 நாள்களில் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறையின் நேற்றைய அறிக்கையின்படி, நேற்றுமுன்தினம் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 59 தொற்றாளர்கள், முல்லைத்தீவில் 25 தொற்றாளர்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42 தொற்றாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் 64 தொற்றாளர்கள் மன்னாரில் 10 தொற்றாளர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 4 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 பேர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா இருவர் என கொவிட் தொற்றால் பலியாகியுள்ளனர் .

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்றுமுன்தினம் வரை வட மாகாணத்தில் 33 ஆயிரத்து 737 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 634 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரத்து 618 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 356 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...