corona virus
செய்திகள்இலங்கை

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் உயிரிழப்பு !

Share

வடக்கு மாகாணத்தில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

செப்டெம்பர் மாதம் முதல் நேற்று (24) வரையான காலத்தில் வடமாகாணத்தில் 8 ஆயிரத்து 401 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (25) சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைப்படி
வவுனியா மாவட்டத்தில் நேற்று(24) 38 தொற்றாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு நேற்றைய தினம் (24) யாழ் மாவட்டத்தில் ஐவரும் , வவுனியா மாவட்டத்தில் இருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரை வட மாகாணத்தில் 35 ஆயிரத்து 571 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , 719 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 371 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 394 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....