Connect with us

செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா போர்: நடந்தது என்ன? நடக்க போவது என்ன? -பாகம் – 1 (காணொலி) – சி.விதுர்ஷன்

Published

on

1 000

 

 

 

இன்று ஒவ்வொரு நாடுகளும், தங்கள் நலன்களை, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள நேரடியாகவும், மறைமுகமாகவும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இரண்டாம் உலகப்போரிற்கு பின்னரான பாரதூரமான மோதல் செயற்பாடாக உக்ரைன் – ரஷ்யா போர் கருதப்படுகிறது.

குறிப்பாக சீனாவுக்கு அண்டை நாடாக இருப்பது இந்தியாவின் நிரந்தரத் தலைவலி என்றால், ரஷ்யாவுக்கு அண்டை நாடாக மாறியதுதான் உக்ரைன் தேசத்தின் தலைவலி.உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்குமா என்பது உலகப் பிரச்னையாக மாறியிருக்கும் பின்னணியில் அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசுகளும் ரஷ்யாவைக் கடுமையாக எச்சரித்தன.

2...................‘உக்ரைனைத் தாக்கும் எண்ணம் இல்லை” என்று சொல்லிக்கொண்டே எல்லையில் படைகளைக் குவித்து வந்தது ரஷ்யா. எனினும் தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரானது கடுமையாக அழிவையும், சேதங்களையும் உருவாக்கி வருகிறது. உக்ரைன் ஆயுதங்களை கீழே வைக்கும் வரையில் போர் நடக்கும் என ரஷ்யா வெளிப்படையாக அறிவித்துள்ளது.

போருக்கான பின்னணி: சோவியத் யூனியன் உடைவு.

400000இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே மறைமுகமாக நிகழ்ந்த ‘பெரிய வல்லரசு யார்?’ என்ற பனிப்போரே உலகின் வரலாறாக இருந்தது. பல தேசங்களில் ஆட்சியை உருவாக்குவதும், கவிழ்ப்பதுமாக அமெரிக்க, சோவியத் யூனியன் வல்லரசுகள் விளையாடின. சோவியத் யூனியனின் உளவு அமைப்பை ஒரு காலத்தில் அமெரிக்காவே மிரட்சியுடன் பார்த்தது. அந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தது.

1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து சிதறியது. இதனா‌ல் சோவியத் யூனியன் 15 நாடுகளாக பிரிந்தது. சோவியத் யூனியனில் அங்கம் வகித்த ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகியவை தனி நாடுகளாகின. 2ம் உலகப்போர் சந்தர்ப்பத்தில் உலகில் வல்லரசு நாடுகளாக அமெரிக்கா, சோவியத் யூனியன்கள் விளங்கிய நிலையில் நாடுகளின் பிரிவால் இது மாறிபோனது. அமெரிக்கா மட்டுமே உலகில் பலம் வாய்ந்த நாடாக மாறியது. இதனால் இருதுருவ முறைமை முடிவுக்கு வந்தது.

உக்ரைன் நாட்டின் நிலைமை

600000இவ்வாறு பிரிந்த நாடுகளில் ஒன்றே உக்ரைன். பொருளாதாரத்தில் வளரும் நாடு உக்ரைன். மனித ஆற்றல் வளர்ச்சியில் உலகத்தில் 74வது இடத்தில் இருக்கிறது. வறுமையும் ஊழலும் அதிகம். வளமான விவசாய நிலம் இருப்பதால் வேளாண் பொருள் ஏற்றுமதியில் முக்கியமான நாடாகத் திகழ்கிறது. ராணுவ பலத்தில் ரஷ்யா, பிரான்ஸிற்க்கு அடுத்து வருகிறது. குடியரசு நாடு, ஜனாதிபதி தலைமையிலான ஒற்றை ஆட்சி முறை நிலவுகிறது. தற்போதைய அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகும்.

இந்நிலையில் ரஷ்யா மீண்டும் பலம் பெற்றுவிடக் கூடாது என்று அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய வல்லரசுகளும் இதே முடிவில் இருந்தன. அதனால், சோவியத் யூனியனிலிருந்து உடைந்து உருவான குட்டிக் சிறிய தேசங்களை வளைக்க ஆரம்பித்தன. இதற்கிடையே 1999-ம் ஆண்டு ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றார் விளாடிமிர் புதின். ரஷ்ய மக்களிடம் தேசியவாத உணர்வை ஊட்டி தொடர்ந்து அங்கு ஆட்சியில் இருக்கும் புதின், ரஷ்யாவை மீண்டும் வல்லரசாக்கத் துடிக்கிறார். அதன் தாக்கத்தை அதிகம் சந்திப்பது உக்ரைன் தேசம்தான்.

நேட்டோவின் ஆதிக்கம்

7000000000000000000000

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பாவில் பல நாடுகளில் கம்யூனிச அரசுகளை ரஷ்யா அமைத்தது. இதனால் மிரண்டு போன அமெரிக்கா, 1949-ல் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கியது. ‘நேட்டோ’ என சுருக்கமாக அழைக்கப்படும் இதில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற 12 நாடுகள் இணைந்தன.

நேட்டோ கூட்டமைப்பில் இருக்கும் எந்த ஒரு நாட்டின் மீது அந்நியப் படையெடுப்பு நிகழ்ந்தாலும், மற்ற நாடுகள் படைகளை அனுப்பி உதவி செய்யும். இந்த நேட்டோ கூட்டணிக்குப் போட்டியாக ‘வோர்சோ ஒப்பந்த நாடுகள்’ என்ற கூட்டமைப்பை ரஷ்யா உருவாக்கியது. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு இந்தக் கூட்டமைப்பு செயலற்றுப் போனது.

ஆனால், நேட்டோ வலுவடைந்தது. சோவியத் யூனியனில் உடைந்து பிரிந்த பல நாடுகளை நேட்டோவில் இணைத்தது அமெரிக்கா. 1997க்குப் பின்னர் பல நாடுகள் சேர ஆரம்பித்தன. இப்போது நேட்டோவில் 30 நாடுகள் உள்ளன. ரஷ்யாவின் அண்டை நாடுகளான எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவையும் நேட்டோவில் இணைந்தன. போதாக்குறைக்கு உக்ரைனும் ஜார்ஜியாவும் நேட்டோவில் சேர விரும்பின. அவையும் இணைந்தால், ரஷ்யாவைச் சுற்றி இருக்கும் எல்லா நாடுகளிலும் அமெரிக்கா தடம் பதித்தது போல ஆகிவிடும்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தன்மை

800000000000000000உக்ரைன் தனி நாடாக இருந்தாலும், அதைக் கிட்டத்தட்ட தன் பின்புற வாசல் போலவே கருதுகிறது ரஷ்யா. ரஷ்யர்களுடன் இன மற்றும் பண்பாட்டு ரீதியாக உக்ரைன் மக்கள் ஒன்றுபட்டவர்கள் என்பது ரஷ்யாவின் வாதம். உக்ரைனில் ரஷ்ய சார்பு அரசே இருந்தது. 2014ம் ஆண்டு மக்கள் போராட்டம் நடத்தி அந்த அரசை வீழ்த்தினர்.

இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் குற்றம் சாட்டினார் புதின். இதைத் தொடர்ந்து உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. அந்தப் போரில் 14 ஆயிரம் பேர் இறந்தார்கள். உக்ரைன் நாட்டின் தென்பகுதியில் இருந்த கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்வசப்படுத்திக் கொண்டது.
ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. சர்வதேச அழுத்தங்கள் வந்தன.

ஆனால், புதின் பணியவில்லை. உக்ரைன் நாட்டில் இருக்கும் லுஹான்ஸ்க் மற்றும் டோனட்ஸ்க் பகுதிகளில் சில ஆயுதக்குழுக்கள் அரசுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ரஷ்யா ஆயுதத்தை வழங்கி வந்தது. விரைவில் அந்தப் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் உத்தேசத்தில் இருக்கிறார் புதின். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உக்ரைன் நாட்டையே ஆக்கிரமிப்பதுதான் ரஷ்யாவின் திட்டமாக மாறியது.

உக்ரைனின் ஆர்வமும், ரஷ்யாவின் எதிர்ப்பும்
9000000000000ரஷ்யாவின் ஆபத்திலிருந்து தப்பிக்க நேட்டோவில் இணைவதுதான் ஒரே வழி என்று தீர்மானித்தார் உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி.அதற்கான முயற்சியில் இறங்கியபோதுதான் தன் கோபத்தை காட்டினார் புதின். இதை ரஷ்யாவால் சகித்து கொள்ள முடியவில்லை. மேலும் சோவியத் யூனியில் அங்கம் வகித்த எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகள் 2004ல் நேட்டோவில் இணைக்கப்பட்டது.

இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஜார்ஜியா, உக்ரைன் நாடுகளை இணைக்க உள்ளதாக 2008 இல் உறுதி அளித்தது. இந்த உறுதிமொழி தற்போது வரை நிலுவையில் உள்ளது. தங்களுடன் எல்லை பகிரும் உக்ரைன், நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் என அதன் அதிபர் விலாடிமர் புதின் நினைக்கிறார்.

இதனால் தான் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகள் நேட்டோ படையில் இணைக்க கூடாது. குறிப்பாக உக்ரைனை சேர்க்கவே கூடாது என வலியுறுத்தி வருகிறார். ஆனால் உக்ரைன் செவிசாய்க்கவில்லை. இதனால் தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை ரஷ்ய அதிபர் விலாடிமர் புதின் விமர்சித்து வருகிறார்.

10

ஆனால் நேட்டோவில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டுகிறது. ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி நேட்டோவில் உக்ரைன் இணைய விரும்புவதற்கு பின்னணியில் முக்கிய விஷயங்கள் உள்ளன. அதாவது நேட்டோவில் இணைவதன் மூலம் உக்ரைன் நாட்டிடம் எல்லை பிரச்சனையில் வாலாட்டும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுப்பதோடு, கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களை சமாளிக்கலாம் என உக்ரைன் நம்புகிறது. மேலும் ரஷ்யாவை விட உக்ரைன் ராணுவம் பலத்தில் சிறியது. இதனால் ரஷ்யாவின் தொடர் தொல்லைகளை சமாளிக்க வேண்டும் என்றால் அது நேட்டோ அமைப்பில் இணைவதுதான் என்பதை உக்ரைன் புரிந்து வைத்து காய் நகர்த்தி வந்தது.

இதனால் கோபமுற்ற ரஷ்யா உக்ரைனின் கிழக்குப் பக்கமான ரஷ்ய எல்லையில் ஒரு லட்சம் ரஷ்யப் படையினரை குவித்தார்கள். தெற்கில் கிரீமியா பகுதியிலும் கருங்கடலிலும் படைகளும் போர்க்கப்பல்களும் அணிவகுத்தன. உக்ரைனுக்கு வடக்கே இருப்பது பெலாரஸ்.அது ரஷ்யாவின் நேச நாடு. அங்கு 30 ஆயிரம் படையினரையும் போர் விமானங்களையும் அனுப்பினார் புதின். இதன் பின்னணியில் போரில் ஈடுபட மாட்டோம் என ரஷ்யா கூறியது. ஆனால் மனிதாபிமானம் அற்ற வகையில் ரஷ்யா போர் தொடுத்து நாசகாரம் செய்து வருகிறது. இந்த பின்னணியிலே போர் ஆரம்பமானது.

உக்ரேனை கைப்பற்ற ரஷ்யா துடிப்பது ஏன்?

1111ரஷ்யாவின் கடலோரப் பரப்பு அத்தனை நீளமானதாக இருந்தும் அதன் முழுமையான நீளம் வடதுருவம் வரை பரவியிருப்பதால் வருடம் முழுவதும் கடல் உறைந்தே இருக்கிறது. இதன் காரணமாக கடல் வணிகத்துக்கு ஏற்ற நல்ல துறைமுகங்கள் அமைவதற்கு இயற்கை கை கொடுக்கவில்லை. கடல் வணிகம் வருடம் முழுவதும் நடை பெறவும், தெற்குப் பகுதிகளுக்கு பண்டமாற்றுத் தொடர்புக்கும், வருடம் முழுவதும் நீர் உறையாத துறைமுகங்கள் அவசியம். இதற்கு ரஷ்யாவிடம் உள்ள ஒரே விடைதான் உக்ரைன்.

ஏனெனில் உக்ரைனின் கடற்பரப்பு கருங்கடலில் அமைந்துள்ளது. மேலும் கருங்கடல் வழியாக மத்திய தரைக்கடலை அடைந்து மற்ற நாடுகளுக்கு உக்ரைன் கடல் வணிகம் செய்ய முடியும். உக்ரைன், புவியியல் ரீதியாக தனக்கு தெற்கில் உள்ள கிரிமியாவில் செவஸ்டபுல் எனும் துறைமுகத்தை பெற்றிருந்தது. ரஷ்ய- உக்ரைன் புரிந்துணர்வின்படி ரஷ்யா அந்தத் துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்திருந்தது. பதிலுக்கு உக்ரைனின் இறையாண்மையை ரஷ்யா காப்பதாக உறுதியளித்தது. ரஷ்யாவின் தற்போதைய பதற்றம் என்னவென்றால், ஒருங்கிணைந்த ஐரோப்பா அல்லது நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் சேர்ந்துவிட்டால் இந்தத் துறைமுகத்தை நிரந்தரமாக இழக்க நேரிடும் என்பதுதான்.

செவஸ்டபுலைத் துறைமுகமாகக் கொண்டு செயல்பட்டாலும் மத்திய தரைக்கடலுக்குச் செல்வதற்குத் துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள பாஸ்பரஸ் கால்வாயை ரஷ்யா பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். நேட்டோ உறுப்பு நாடான துருக்கி இதுவரையிலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் ரஷ்யாவை அனுமதித்து வருகிறது. ஆனால் சர்வதேச அழுத்தம் காரணமாக எப்போது வேண்டுமானாலும் ரஷ்யாவுக்கு அனுமதி மறுக்கப்படலாம். உக்ரைனை மேலை நாடுகள் பக்கம் செல்லாதவாறு ரஷ்யா தடுப்பதற்கு இதுவே முக்கியக் காரணம்.

போர் தாக்குதலும், இழப்புக்களும்

12உலக நாடுகளின் எதிர்ப்பு, பொருளாதார தடை விதிப்புகளை புறந்தள்ளி, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றும் வகையில், அந் நாட்டுக்குள் ரஷ்யப் படைகள் புகுந்தன. தொடரும் இந்த தாக்குதலில் இதுவரை நூற்றுக்கணக்கான வீரர்கள் பலியாகி உள்ளனர்.

மேலும் கீவ் நகரில் ஏவுகணை தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளன. உக்ரைனிடமிருந்து ஏற்கனவே கைப்பற்றிய கிரீமியா பகுதி வழியாகவும், நட்பு நாடான பெலாரஸ் எல்லை வழியாகவும், உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் புகுந்தன. இதைத் தொடர்ந்து, ரஷ்ய விமானப் படைகள், உக்ரைன் மீது வான்வழி தாக்குதலையும் நடத்தின. உக்ரைனிடமிருந்து ஏற்கனவே கைப்பற்றிய கிரீமியா பகுதி வழியாகவும், நட்பு நாடான பெலாரஸ் எல்லை வழியாகவும், உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் புகுந்தன. இதைத் தொடர்ந்து, ரஷ்ய விமானப் படைகள், உக்ரைன் மீது வான்வழி தாக்குதலையும் நடத்தின.

14உக்ரைன் விமானப் படையின் 11 தளங்கள் உட்பட, 70க்கும் மேற்பட்ட ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக, ரஷ்யா அறிவித்தது. உக்ரைனின் வான்வழியைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் பங்கு சந்தைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதற்கிடையே, உக்ரைனில் கீவ் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் அச்சமடைந்தனர். வீடுகளிலேயே இருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். பலர் நாட்டை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர். 100,000 மேற்பட்ட மக்கள் போலந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் முன்றாம் நாள் கணிப்பின்படி (26.02.2022) 3500 ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும், 200 பேர் கைது செய்யப்பட்டனர் என உக்ரைன் இராணுவம் முகநூல் பகுதியில் அறிவித்துள்ளது. 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர், 102 டேங்குகளை ரஷ்யா இழந்துள்ளனர் என குறிப்பிடுகின்றது.

 

13இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குள் ரஷ்ய ராணுவம் அதிரடியாக நுழைந்து அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்தது. உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா முதல் நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இது குறித்து உக்ரைன் அரசு கூறும்போது, “செர்னோபில் அணு உலையை ரஷ்யா ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் அச்சுறுத்தலில் உள்ளன” என்று தெரிவித்தது. இதனை பயன்படுத்தி அணுவாயுதத்தை தயாரிக்க முடியும் என கூறப்படுகிறது.

போர் தொடர்பில் நாடுகளின் நிலைப்பாடு

15

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும், சர்வதேச அமைப்புகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே பெரும்பாலான நாடுகளும் கொண்டுள்ளன. அந்தவகையில் அமெரிக்கா “உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் நிச்சயமாக மனித உயிர்களுக்கு பேரிழப்பு ஏற்படும்.

இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவையே பொறுப்பாக்கும். இந்தத் தாக்குதல் நியாயமற்றது” என்கிறது. மேலும் ஜெர்மனி “உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அப்பட்டமான விதிமீறல்” என்கிறது. இதைவிட ஐக்கிய நாடுகள் சபையானது குறிப்பிடுகையில், போரின் விளைவுகள் உக்ரைனுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்; உலகப் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும். ரஷ்ய அதிபரே.. மனிதாபிமான அடிப்படையில் உங்களது படைகளைத் திரும்ப பெறுங்கள் என்கிறது.

மேலும் பிரிட்டன் “உக்ரைன் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் ரத்தம் சிந்தும் அழிவுப் பாதையை ரஷ்ய அதிபர் தேர்ந்தெடுத்துள்ளார்” என்கிறது.

போர் தொடர்பில் ஐரோப்பிய யூனியன் குறிப்பிடுகையில், “இந்த கடுமையான நேரத்தில், உக்ரைனின் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் பக்கம் நிற்கிறோம். உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்கும்” என்கிறது. மேலும் நேட்டோவானது இறையாண்மை மற்றும் சுதந்திர நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் பாதையை ரஷ்யா தேர்ந்தெடுத்துள்ளது என்கிறது.

செக் குடியரசானது “ரஷ்யாவின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது, சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்கிறது. சீனாவானது உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்துவதால், அங்குள்ள சீன மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்கிறது. இது ரஷ்யாவுக்கான ஆதரவை காட்டுகிறது. மேலும் போலந்து நாடு குறிப்பிடுகையில், ரஷ்யாவின் குற்ற நடவடிக்கைக்கு எதிராக நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறது.

ஹங்கேரி குறிப்பிடுகையில், “இப்போதைய பணி, எப்போதும் போல் ஹங்கேரிய மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதாகும். உக்ரைனில் உள்ள ஹங்கேரி தூதரகத்தை ஹங்கேரி மக்கள் தொடர்பு கொள்ளுங்கள் என்கிறது.

மேலும் ஆஸ்திரேலியா குறிப்பிடுகையில்

சட்டவிரோதமான, தேவையற்ற, நியாயமற்ற தாக்குதல்கள். இந்த அச்சுறுத்தலுக்கு நிச்சயம் விலை உண்டு என்கிறது. இதைவிட பிரான்ஸ் நாடு குறிப்பிடுகையில், ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும். பிரான்ஸ் உக்ரைனுடன் நிற்கிறது என்கிறது. ஸ்பெயின் குறிப்பிடுகையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிறது. கனடா நாடு குறிப்பிடுகையில் “இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான மீறல். இந்த பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான செயல்கள் தண்டிக்கப்பட கூடியது” என்கிறது.

மேலும் “உக்ரைனில் நடந்துவரும் போர் சூழல்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். மேலும், உயிரிழப்புகள் குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். வன்முறையை அதிகப்படுத்தக்கூடிய நிலைப்பாட்டை மேற்கொள்ளும் அனைத்து தரப்பினரும் தங்கள் நடவடிக்கைகளைக் கைவிடவேண்டும். எங்கள் வெளியுறவுக் கொள்கையின் நடுநிலைமைக்கு இணங்க, ரஷ்யா மற்றும் உக்ரைன், போர் சூழலை அமைதியான முறையில் தீர்க்க இருநாடுகள் பேச்சுவார்தைக்கு முன்வர வேண்டும்” என்று ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் எமிரேட்ஸ்ன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ரஷ்ய மக்களின் ஆர்ப்பாட்டம்

16உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் குறித்து எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷ்யாவின் மத்திய மாஸ்கோ மற்றும் செயிண்ட் பிட்டர்ஸ்பர்க் பகுதியில், போர் எதிர்ப்பு முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த 600 பேரைத் தற்காலிக கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மாஸ்கோவில், புஷ்கின்ஸ்கயா சதுக்கத்தில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்,

“போரை நிறுத்துங்கள்,” “போர் வேண்டாம்,” “உக்ரைன் நம் எதிரி அல்ல” மற்றும் “இந்த போர் யாருக்கும் தேவையில்லை” போன்ற முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்கு ரஷ்ய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட 56 நகரங்களில் அதிபர் புடினுக்கு எதிராக கோஷம் எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஈடுபட்ட ஏறக்குறைய 1,400 ஆர்ப்பாட்டக்காரர்களை ரஷ்ய போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 51 நகரங்களில் 1,391 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், எதிர்க்கட்சி பேரணிகளில் கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சி.விதுர்ஷன்
அரசியல் விஞ்ஞானத் துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்.

#Russia #Ukraine

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilni 446 tamilni 446
ஜோதிடம்19 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 28.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 28.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

tamilni 445 tamilni 445
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 27.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 27.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 27, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

tamilni 444 tamilni 444
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 26.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 26.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 26, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

tamilni 442 tamilni 442
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

tamilni 437 tamilni 437
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 24.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 24.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

tamilnaadi 150 tamilnaadi 150
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 23.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 23.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 23, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

tamilni 429 tamilni 429
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 22.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 22.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 22, 2024, சோபகிருது வருடம் பங்குனி...