IMG 20220302 WA0041
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள்! – வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு!

Share

பிரதேச அபிவிருத்திகளின் போது யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் எல்லை மீறி செல்வதை தடுப்பதற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து கொடுப்பதற்குமாக யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் அனைவரும் இணைந்து பேசி விரைவில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக சுன்னாகம் பிரதேச சபையின் தவிசாளர் கே.தர்சன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகளால் பிரதேச சபையை மையப்படுத்திய மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் சில உறுப்பினர்கள் வலி தெற்கு பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளர் முகுந்தனுடன் கலந்துரையாடல் ஒன்னை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரரிவித்திருந்தார்.

கடந்த வாரம் இடம்பெற்ற வலி. தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போது பிரதேசத்தின் பல அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இடையூறாக உள்ளதாகவும் அவர்களின் தன்னிச்சையான முடிவுகளால் மக்கள் பல அவலங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அதிகளவான உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக வட்டாரத்துக்கு நான்கு மில்லியன் முன்மொழிவுகளை அரியல் நுழைவு இன்றின் வட்டாரத்தின் பிரதிநிதிகள் ஊடாக தெரிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அது யாழ்ப்பாணத்தில் மட்டும் மாவட்ட ஒருங்கிணைப்பு முழுவின் முடியாக இருப்பதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறித்த திட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நடைமுறை என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் என்று பிரதேச செயலருக்கு சுட்டிக்காட்டியிருந்த உறுப்பினர்கள், ஆனால் இவ்வாறான தன்னிச்சையான நடைமுறை யாழ்ப்பாணத்தில் மட்டும் இருப்பதாகவும் இவ்வாறான நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த உறுப்பினர்களது கருத்துக்களை செவிமடுத்திருந்த வலி தெற்கு பிரதேச செயலாளர் இது தொடர்பில் தான் துறைசார் தரப்பினருக்கு தெரியப்படுத்துவதாகவும் தற்போது குறித்த திட்டங்களுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பின்போது வலி தெற்கு பிரதேச சபையை அங்கத்துவம் செய்யும் கட்சிகளுள் ஶ்ரீலங்கா சதந்திர கட்சியை தவிர்து ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...