வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இதுவரை இடம்பெற்றுவந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் கடந்த செப்ரெம்பர், ஒக்ரோபர் மாதங்களிலும், இம்மாதமும் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளது. இச்சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த சம்பவங்கள் தொடர்பில் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையின்போது அவர்களிடமிருந்து 2 மோட்டர் சைக்கிள், 4 வாள்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் பொல்லுகள், 15 பவுண் நகை, முகத்தை மறைக்கும் கறுப்பு துணி என்பன மீட்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் முடிவில் அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
#SriLankaNews
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment