ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கான முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக இறங்கியுள்ளார்.
இதன்படி சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கடந்தகாலங்களில் தொடர் சந்திப்புகளை நடத்தியிருந்தார். இதன் பலனாக முக்கிய தரப்புகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் மற்றுமொரு விசேட கலந்துரையாடல் இன்று சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்களையும் குறித்த கூட்டணிக்குள் உள்வாங்குவதற்கு மைத்திரி தரப்பு முயற்சித்து வருகின்றது.
#SriLankaNews
Leave a comment