செய்திகள்
அரச அலுவலகங்களுக்கு விடுமுறை!

சென்னையில் அரச அலுவலங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது .
இந்தியாவின் சென்னையில் அரசு அலுவலங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்திவாசிய சேவை துறை தவிர்த்து அனைத்து துறைகளுக்கும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் இரண்டு நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
இதனால், வீதிகள் அனைத்தும் வெள்ளம் நிறைந்து வழிகின்றன.
இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மழை பாதிப்பை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் இல்லையாயின் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு தமிழ்நாட்டில் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#india
You must be logged in to post a comment Login