தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச் சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கடந்த ஒக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரை 80,055 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் உள்நுழையும் , வெளியேறும் பகுதிகளில் பயணித்த 2,596 பேரும், 1,718 வாகனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 99 பேரும் , 52 வாகனங்களும் திருப்பி அனுப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கும் உடனடியாக தடுப்பூசியை வழங்க தொற்றுநோய் தொடர்பான ஆலோசனைக் குழு அனுமதியளிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
அந்த சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Leave a comment