செய்திகள்
இன்று தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு!


இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து இப் போராட்டம் இன்று காலை 7.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் தாதியர்கள் உள்ளிட்ட 40 சுகாதார தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளன.
இடைநிறுத்தப்பட்ட கொவிட் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.