ஏழு பேர் கொண்ட ஆசிய ரக்பி போட்டி தொடர் எதிர்வரும் நவம்பர் 19ஆம் 20ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக தடைப்பட்டு உள்ள ஆசிய ரக்பி விளையாட்டை மீண்டும் ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும்.
ஆரம்பத்தில் இந்த தொடரை மூன்று கட்டங்களாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் இம்முறை அதனை ஒரு போட்டித் தொடராக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் ஆபிரிக்காவில் நடைபெற உள்ள உலகக் கிண்ண ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டி தொடருக்கான ஆசிய தகுதிகான் போட்டியாகவும் இது விளங்குகின்றது.
அதேபோல், அடுத்த வருடம் சீனாவில் இடம்பெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதிகாண் போட்டியாகவும் இது விளங்குகின்றது.
1 Comment