ஐ.பி.எல் 14ஆவது போட்டித்தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வீரர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியானதால் எஞ்சிய போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில்,கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.
அதற்கேற்ப அத் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இப் போட்டித் தொடர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
டுபாயில் இன்றிரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment