பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு?
பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு?
நாட்டில் திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது,
இவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரியை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டுள்ள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, கல்விப் பொதுத் தாராதர உயர் தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருந்தன.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று பரவல் காரணமாக இந்தப் பரீட்சைகளை
முன்னரே திட்டமிட்டபடி நடத்துவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பரீட்சைகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கான நிலைமை உருவாகியுள்ளது என்றுள்ளது.