சிகிச்சை முடிந்து திரும்பியவர் வீட்டில் சாவு!
கொரோனா தொற்று ஏற்பட்டால் நிலையில்,கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுகுணமடைந்த பின்னர் வீடு திரும்பிய நபர் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை பகுதியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு மந்திகை மருத்துவமனையில் தொடர்ந்து 10 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்டது, அவர் குணமடைந்த நிலையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
வீடு திரும்பிய அவர், தனது வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த வேளை அவர் நேற்று உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Leave a comment