செய்திகள்
அத்துமீறும் இந்திய படகுகள் – யாழ். மீனவர்கள் இருவர் மாயம்!!
அத்துமீறும் இந்திய படகுகள் – யாழ். மீனவர்கள் இருவர் மாயம்!!
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர். இந்திய மீனவர்களின் இழுவைப் படகு மோதியதிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கடற்பரப்பில் அண்மைய நாள்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று காலையிலும் இந்திய படகுகள் வடக்கு கடல் பகுதியில் நடமாடியுள்ளன.
நேற்று காலை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வல்வெட்டித்துறை மீனவர்களின் இரண்டு படகுகள் மீது, அங்கு வந்த இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் மோதியுள்ளன.
இந்த சம்பவத்தில் ஒரு படகு கடும் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த இருவருடன் கரை திரும்பியுள்ளது. இதேவேளை, மற்றைய படகில் பயணித்த வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த இராகவன், வளவன் ஆகிய மீனவர்கள் இருவரும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் இருவரையும் தேடி ஏனைய மீனவர்கள் கடலுக்குச் சென்று தேடுதல் நடத்தியபோதிலும் நேற்று இரவு வரை அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login