நேற்று மட்டும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!!
இலங்கையில் நேற்று மட்டும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 20 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுளளது என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, அஸ்ராஜெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் 31 ஆயிரத்து 41 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 955 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளது.
சினோபாம் தடுப்பூசியின் முதல் டோஸ் 76 ஆயிரத்து 694 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 17 ஆயிரத்து 962 பேருக்கும் செலுத்தப்பட்டது.
மேலும், பைஸர் தடுப்பூசியின் முதல் டோஸ் 117 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 7 ஆயிரத்து 251 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் நேற்று வரை பயன்படுத்தியுள்ள மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒரு கோடி 56 லட்சத்து 89 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் இலங்கையில், 40 லட்சத்து 17ஆயிரத்து 85 பேருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
Leave a comment