17694127100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதம்: ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி!

Share

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பாடசாலை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க இது குறித்துக் கூறுகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் ஒருவரின் உடல்நிலை இன்று மிக மோசமடைந்ததால், அவர் அவசர சிகிச்சைக்காகத் தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களை, ஆசிரியர் சேவையில் (Teacher Service) உள்வாங்கி நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆரம்பத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அடையாளச் சத்தியாக்கிரகப் போராட்டமாகத் தொடங்கிய இந்த நடவடிக்கை, அரசாங்கத்திடமிருந்து முறையான தீர்வு கிடைக்காத காரணத்தினால் தற்போது சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமாக மாற்றமடைந்துள்ளது.

தங்கள் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஏனைய உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்
இலங்கை

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்.

  இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள்...

இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...

anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...