22 6343d1dce586b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு பாடசாலை வீடியோ சர்ச்சை: ஆசிரியைகளுடன் மாணவர் நெருக்கம் – கல்வி அமைச்சு அதிரடி விசாரணை!

Share

கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையின் மாணவத் தலைவர் மற்றும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கு இடையிலான முறையற்ற உறவு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் கசிந்துள்ள நிலையில், இது குறித்து கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள கல்விச் செயலாளர் நலகா கலுவேவா, குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாடசாலை அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ காட்சிகள் தொடர்பில் அமைச்சு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
அதிபர் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முறையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை குறித்த ஆசிரியர்களைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யவோ அல்லது ஏனைய ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கவோ முடியாது எனச் செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாடசாலையின் மாணவத் தலைவர் என்று கூறப்படும் மாணவன், மூன்று பெண் ஆசிரியர்கள் மற்றும் மற்றொரு மாணவரின் தாயுடன் சமூக ஊடகங்கள் ஊடாக வீடியோ அழைப்புகளை மேற்கொண்டதாகவும், அதில் அவர்கள் நிர்வாணமாக முறையற்ற செயல்களில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

இந்தச் சம்பவம் மாணவர் சமூகம் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், கல்வித்துறையில் நற்பண்புகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...