அமெரிக்கா, இந்தியாவை விடவும் இலங்கையின் நிலைமை மிக மோசம்!!
கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் மற்றும் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்பவர்கள் வீதத்தில் இலங்கையானது அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர், பூட்டான், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் உயர்மட்டத்திலுள்ளது என்று தெரிய வந்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரவு பகுப்பாய்வொன்றின் மூலம் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் காணப்படும் இந்த பாரதூரமான நிலைமையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதற்கு தற்போது முன்னெடுக்கப்படும் கொவிட் -19 பரிசோதனைகளின் அளவு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போதுமானதாக அமையாது.
இந்த தரவு பகுப்பாய்வின் ஊடாக கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தல் தொடர்பிலும் தடுப்பூசி வழங்கல் தொடர்பிலும் தொற்று நோயியல் பிரிவு மற்றும் அரசாங்கம் என்பவை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பது வெளிப்படுகின்றது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Leave a comment