FfztB2DUUAAVfV3 e1666606990237
சினிமாபொழுதுபோக்கு

‘அடுத்த வாரத்தில் இருந்து சும்மா பட்டாசு வெடிக்கும்’ வாரிசு மாஸ் அப்டேட்

Share

தளபதி விஜய் நடித்துவரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் ‘வாரிசு’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய அட்டகாசமான போஸ்டரின் மூலம் பொங்கல் ரிலீஸ் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

இந்த போஸ்டரில் விஜய் ஆக்ரோஷமாக கையில் ஆயுதத்துடன் நிற்பது போலவும் சுற்றி உள்ளவர்கள் அவரிடம் அடி வாங்கி கீழே விழுந்து கிடப்பது போலவும் உள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போஸ்டரில் ‘ஹேப்பி தீபாவளி நண்பா.. அடுத்த வாரத்தில் இருந்து சும்மா பட்டாசு வெடிக்கும்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அடுத்த வாரத்திலிருந்து இந்த படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

FfztB2DUUAAVfV3 1

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...