thalapathy66
சினிமாபொழுதுபோக்கு

‘வாரிசு’ – சமூக வலைத்தள பக்கங்களை ஆக்கிரமித்துள்ள ‘தளபதி 66’ டைட்டில்

Share

‘தளபதி 66’ படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

படத்திற்கு ‘வாரிசு’ என பெயரிடப்பட்டுள்ளது.

தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்துக்கு ‘வாரிசு’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இடம்பெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாளை தளபதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

கம்பீர லுக்கில் விஜய் கோட் சூட்டுடன் அமர்ந்திருக்கும்படியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக படத்தின் டைட்டில் இது குடும்பக் கதையைப் பின்னணியாக கொண்ட படமாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.

289477233 163765366153251 5101730595816118989 n

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...