master
சினிமாபொழுதுபோக்கு

ஜப்பானில் ரிலீஸ் ஆகிறது தளபதியின் சூப்பர் ஹிட் படம்

Share

சமீபத்தில் பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஜப்பானில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படம் ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’முத்து’ திரைப்படம் முதல்முதலில் ஜப்பானில் ரிலீஸான தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது என்பதும் அதன் பிறகு ரஜினியின் அனைத்து படங்களும் ஜப்பானில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்’ உள்பட பல இந்திய திரைப்படங்கள் தற்போது ஜப்பானில் ரிலீஸ் ஆகி வருகின்றன. அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

’மாஸ்டர்’ படம் ஜப்பானில் நவம்பர் 18ஆம் தேதி ரிலீசாக உள்ளதாகவும் இதற்கான பணிகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக புறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’மாஸ்டர்’ திரைப்படம் தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஜப்பானிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ezgif 2 0ea4cf3677

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...