இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது ‘தளபதி 66’.
படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில், படப்பிடிப்புக்காக தளபதி விஜய் விமான நிலையம் சென்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அண்மையில், சென்னையில் தளபதி 66 பூஜை நடைபெற்ற நிலையில், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் அன்றே நடந்தது. இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தளபதி விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தளபதி விஜய் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களை ஆக்கிரமித்துள்ளன.
தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் விஜய் அண்ணனாக நடிகர் ஷாம் நடிக்கும் அதேவேளை, தந்தையாக சரத்குமார் நடிக்கவுள்ளார். தமன் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Cinema
Leave a comment