சின்னத்திரையில் தனக்கென தனியிடம் பிடித்தவர் சிவாங்கி.
ஆனால் அவர் ஒரு பாடகியாகவே பலருக்கும் முதலில் அறிமுகமானார்.
இதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.
இதனையடுத்து திரைத்துறையிலும் தனது கவனத்தை செலுதத் தொடங்கினார் சிவாங்கி,
சிவகார்த்திகேயனின் டான், சிவா உடன் காசேதான் கடவுளடா போன்ற படங்களை தற்போது கைவசம் வைத்துள்ளார்.
பல்வேறு படங்களில் பின்னணிப் பாடல்களையும் பாடி வருகிறார்.
தற்போது ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயன்’ என்கிற படத்துக்காக நடிகர் சிம்புவுடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை பாடியுள்ளார் ‘மச்சி’ என தொடங்கும் அப்பாடலின் புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.
விரைவில் இப்பாடல் வெளியிடப்படும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மாயன்’ திரைப்படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பின்னணிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தாண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Leave a comment